இலங்கை கடற்படையினரால் உள்ளூர் மீனவர்கள் 12 பேர் கைது!

விடத்தல்தீவு கடற்பரப்பில், தடை செய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்த உள்ளூர் மீனவர்கள் 12 பேரை, நேற்று  (29) வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான கடற்படையினர் கைது செய்துள்ளதாக, கடற்படையின் ஊடகப்பேச்சாளர் லெப்டினன்கொமாண்டர் வலாக்கொலகே தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து,  மூன்று படகுகள், ஒரு தொகுதி தங்கூசி வலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, விடத்தல் தீவு கடற்றொழில் நீரியல்வளத்துறை மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com