இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானத்தின் மீனதான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிபகளை அனுமதிக்கப்போவதில்லை என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளாரே என ஊடகவியலாளர் ஒருவர் கேள்விஎழுப்பியபோது தீர்மனாத்தின் உள்ளடக்கம் தொடர்பாக வாதப் பிரதி வாதங்கள் இருப்பது இயற்கையே. அவை தொடர்பாக ஆராய்வதற்கு தான் இங்கு வந்திருக்கிறேன் என மழுப்பலான பதில் வழங்கியுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் (Zeid Ra’ad Al Hussein)
.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இன்று (07.01.2016) யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் சபாபதி முகாமில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து உரையாடியபின் ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்.
வடக்கு முதல்வரைச் சந்தித்து உரையாடினீர்கள் அவருடனான சந்திப்பு தொடர்பாக ?
ஓரளவு குறிப்பிடத்தக்களவு மாற்றம் நடந்திருக்கிறது என்பது ஒப்புக் கொள்ளப்படுகின்றது. ஆனால் இன்னும் பல விடயங்களில் முன்னேற்றம் தேவை என்பது முக்கியமானது. எனது செப்டெம்பர் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள், விதந்துரைகள் அவற்றின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் மாகாண,மத்திய அலுவலர்களின் எண்ணப்பாங்கை அறிய வந்திருக்கிறேன். விஜய முடிவில் இது தொடர்பில் முழுமையான விளங்கிக் கொள்ளலை பெற முடியும் என எண்ணுகிறேன்.
அண்மையில் கருத்துத் தெரிவித்த இலங்கை அதிபர் சிறிசேனா வெளிநாட்டு நீதிபதிகள் பங்கு பற்ற விட மாட்டேன் என்று கூறியிருந்தார் அவரது கருத்து தொடர்பாக ?
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் சேர்ந்து தான் நிறைவேற்றியது. தீர்மனாத்தின் உள்ளடக்கம் தொடர்பாக வாதப் பிரதி வாதங்கள் இருப்பது இயற்கையே. அவை தொடர்பாக ஆராய்வதற்கு தான் இங்கு வந்திருக்கிறேன். என்றார்.