இலங்கையில் முதலீடு செய்ய 29 ஜெர்மனி நிறுவனங்கள் விருப்பம்

இலங்கையில் முதலீடு 29 ஜெர்மனி நிறுவனங்கள் செய்ய முன்வதந்துள்ளன என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் அண்மையில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான ஜனாதிபதியின் விஜயம் நாட்டுக்கு பாரிய பொருளாதார வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியிலுள்ள 29 நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதுநிமித்தம் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துடைய அமைச்சர் ஒருவரின் தலைமையிலான குழுவொன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளன.
இதேபோல், ஆஸ்த்திரியா நாட்டு முதலீட்டுக் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளது. அக்குழு புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான துறைகளில் முதலீடு செய்யவுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆஸ்திரிய அரசு இலங்கைக்கு 250 மில்லியன் யூரோ நிதியை கடனாக வழங்க அனுமதித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com