இலங்கையில் முதலிட வாருங்கள் – புலம்பெயர் தமிழர்களிற்கு சம்பந்தர் அழைப்பு

150328132736_sampanthar_tamilarasu_party_tna_512x288_bbc_nocreditதற்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திகளை விரைவுபடுத்த அரசு சில திட்டங்களைத் தீட்டிவரும் வேளையில், புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள் இங்கு முதலீடு செய்து, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என இலங்கையின் எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருகோணமலை தென்னைமரவாடியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியது புலம்பெயர் தமிழ் மக்களின் கடமை என தெரிவித்திருக்கிறார்.
இலங்கை அரசு பொருளாதார முதலீடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அந்த வாய்ப்பை புலம்பெயர் தமிழர்கள் பயன்படுத்திக் கொண்டு, வடக்கு கிழக்கு பகுதியில் முதலீடு செய்யவேண்டும் என சம்பந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே இந்த ஆண்டின் இறுதிக்குள் நீடித்திருக்கும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்று எட்டப்படும் எனும் நம்பிக்கை தனக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds