இலங்கையில் நடைபெற்ற குற்றங்களை போர்க்குற்றம் எனக் கூறவேண்டாம் – பசில் ராஜபக்ச

இலங்கையில் நடைபெற்ற குற்றங்களை போர்க்குற்றம் எனக் கூறவேண்டாம் எனக் குறிப்பிட்ட முன்னாள் பொருளாதார விவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியின் தலைவருமான பசில் ராஜபக்ச இலங்கையில் யுத்த மோதல்களின் பின் நடைபெற்ற குற்றங்கள் போர்க்குற்றமல்ல அதுவொரு சிறுகுற்றமே என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கே இவ்வாறு பதிலளித்தார்.
தற்போதைய அரசின் அமைச்சரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா போர்க்குற்றத்தில் ஈடுபட்ட படையினரை தண்டிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளாரேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இலங்கையில் நடந்தது போர்க்குற்றமல்ல. அதுவொரு சிறுகுற்றமே நீங்கள் அவற்றை போர்க்குற்றம் எனக் கூறவேண்டாம் என்று தெரிவித்தார்.
பொறுப்பான கதிரைகளினில் இருப்பவர்கள் வெளியிடும் வார்த்தைகள் தொடர்பில் கவனமாக இருக்கவேண்டும். இதற்கு மேல் இவ்விடயத்தில் தற்போது நான் எதனையும் இவ்விடத்தில் சொல்லமுடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் உள்ள நிலையினில் எதற்காக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை இலக்கு வைத்து தென்னிலங்கையில் தாக்குதல் நடத்தப்படுகின்றதேயென்ற கேள்விக்கு பதிலளித்த அவர் உண்மையில் வடக்கு மக்கள் மீது கூடிய அன்பையும் அக்கறையும் கொண்டவராக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளதாக கருதுகின்றேன்.அதனால் தான் அவர் மீது தென்னிலங்கையினில் தாக்குதல் நடத்தப்படுகின்றதோவென தெரியவில்லையென்றார். எனினும் முன்னாள் ஜனாதிபதியான சகோதரர் மஹிந்த மீது முதலமைச்சர் மரியாதை கொண்டிருந்தார் எனவும் அதனாலேயே தனது பதவிப்பிரமாணத்தை அவர் முன் செய்துகொண்டதையும் நினைவுகூர்ந்தார்.

இதனிடையே கூட்டமைப்பு, தமிழ் மக்களிற்கு எதனையும் தராத இந்த அரசின் பங்காளிகளாக உள்ளதால் அவர்களுடன் தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றிபேச விரும்பவில்லையென தெரிவித்ததுடன் அதனாலேயே தமது கட்சியான சிறீலங்கா பொதுஜன முன்னணி நேரடியாக தமிழ் மக்களை சந்திக்க வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com