சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையில் சர்வதேச விசாரணை கோரி வடமாகாணசபை தீர்மானம்

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரி வடமாகாணசபை தீர்மானம்

இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டும் என்று வடமாகாண சபையில் 01/09/2015 செவ்வாய்க்கிழமை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்தார்.

ஏற்கனவே சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டிருக்கிறது என்று பிபிசி தமிழோசையிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் 31/08/2015 திங்கட்கிழமை தெரிவித்திருந்த பின்னணியில் 01/09/2015 செவ்வாய்க்கிழமை இந்த தீர்மானம் வடமகாண சபையில் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் மற்றுமொரு பிரதி இராஜாங்க செயலாளர் டொம் மெரினோவ்ஸ்கின் ஆகியோருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தார்

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com