சற்று முன்
Home / பிரதான செய்திகள் / இலங்கையில் சர்வதேச விசாரணை : கலம் மெக்ரே நம்பிக்கை

இலங்கையில் சர்வதேச விசாரணை : கலம் மெக்ரே நம்பிக்கை

(11.09.2015) இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
இலங்கை கொலைக்களம் ஆவணப்பட இயக்குனர் கலம் மெக்ரே. இந்திய தொலைக்காட்சியான புதியதலைமுறைக்கு அவர் அளித்த பிரத்தியோக பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
இலங்கையில் அனைவரும் அமைதியாக வாழ வேண்டுமானால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டியது அவசியம்.
சர்வதேச விசாரணைக்கு ஏற்ற வகையில் ஐக்கிய நாட்டு மனித உரிமைகள் ஆணையம் விசாரணை அமைப்பை ஒன்றை உருவாக்கும் என்று நம்புகிறேன். காரணம், பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் விசாரணை அமைப்பு இருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் உள்ளிட்டவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள புதிய அரசாங்கம் போரின்போது நடைபெற்ற குற்றங்களுக்கும் பதில் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் துணிச்சலுடன் முன்வந்து நடந்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு சர்வதேச விசாரணை நடத்த முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com