சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் இன்று (மார்ச் 24) செவ்வாய்க்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 101ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 102பேர்) அதிகரித்துள்ளது.

நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 229 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களில் 6 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 32 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்து 290 பேர்வரை தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com