சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையில் கொரோனா தொற்று 91 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று 91 ஆக அதிகரிப்பு

நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இரவு (2020.03.22) கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 04 ஆக பதிவானதுடன் இன்றைய தினத்தில் 5 நோயாளர்கள் (2020.03.23) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க COVID 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் தெரிவித்தார்.

இதற்கமைவாக இலங்கையில்; மொத்த கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளர் குணமடைந்து IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறிதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேருக்கு கொறோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கொறோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான இருவர் தொடர்ந்தும் ஐடிஎச் வைத்தியாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிக்சை பெற்று வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com