சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் !!

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் !!

இயற்கை அனர்த்ததையடுத்து எலி காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உண்டு.

இதனால் நீருடனான அனர்த்த பகுதிகளில் நடமாடும் போது பாதணிகளை அணிந்துக் கொள்ளவேண்டும் என்று சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர், அப்பகுதிகளை நன்றாகத் தூய்மைறப்படுத்திய பின் வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவித்ள்ள சுகாதாரப் பரிசோதகர்கள் பிரதேசங்களை அண்மித்துள்ள சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன், வீடுகளை சுத்தப்படுத்திக்கொள்வதற்காக, 011-2635675 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் நீர்த் தாங்கிகளையும் சுத்தம் செய்யுமாறும் கொதித்தாரிய நீரை மாத்திரம் அருந்துமாறும் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவுருத்தியுள்ளது.

இதேவேளை, வெள்ளத்திற்குட்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com