இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்து விசாரணைக்கு அழைப்பு

1451239260-1352

இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்ட சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் இறுதி அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் 10 பேர் கொண்ட நிபுணர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் பின்னர், இலங்கையில் பாரிய சித்திரவதைகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளாந்தம் நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதாகவும் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை அச்சுறுத்தல்கள், கொலைகள், தடுத்து வைத்தல், கடத்திச் செல்லுதல், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் இடம்பெறும் மரணங்கள், தாக்குதல்கள் போன்ற விடயங்கள் இலங்கையில் அதிகளவில் இடம்பெறுவதாக இந்த கண்காணிப்பின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன், இலங்கையில் இவ்வாறான நிலைமைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நியாயத்தை உடனடியாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறித்த கண்காணிப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com