இலங்கையில் ஆபத்தான நோயின் அறிகுறிகள்! விரைவாக பகிருங்கள்

இன்புளு வெண்சா என்று பொதுவாக அழைக்கப்படும் சுவாசத் தொற்று RNA வைரசினால் ஏற்படுகின்றது. RNA வைரசில் உள்ள புரதத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்புளுவெண்சா A, இன்புளுவெண்சா B, இன்புளுவெண்சா C என வேறுபட்ட நோய்த்தாக்கம் ஏற்படலாம்.

இதில் இன்புளுவெண்சா A – உலகம் முழுவதும் பரவும் வீரியம்மிக்க நோயாகும். இன்புளுவெண்சா B குறித்த பிரதேசத்தில் பரவும் நோயகும். இன்புளுவெண்சா C அரிதாகப் பரவும் நோயாகும்.

இன்புளுவெண்சா வைரசிலுள்ள கிளைக்கோபுரதம் Haemagglutin (H) விருந்து வழங்கியின் உட்கலத்துடன் இணைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

இன்புளுவெண்சா வைரசைச் சூழவுள்ள நியூராமிடேஸ் நொதியம் (N) பெருகிய வைரசினை விருந்து வழங்கியினுள் விடுவிக்க உதவும்.

கிளைக்கோபுரதத்தில் Hஇல் 16 வகைகள் உண்டு.

H1, H2, H3, N1, N2 என்பவையே மனிதனில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. H1, N1 வகை 1918 – 1919ல் உலகில் 40 மில்லியன் மக்களின் இறப்பிற்குக் காரணமாக அமைந்தது.

H2, N2 வகை 1957இல் ஆசியாவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. H2, N2 வகை 1968இல் பாதிப்பை ஏற்படுத்தியது. H1, N1 வகை 1978இல் ஒன்றியாவில் நோயினை ஏற்படுத்தியது.

H1, N1 pdm 2009இல் பன்றித் தொற்றாக விகாரமடைந்தது. இதனையே பன்றிக் காய்ச்சல் என அழைத்தனர். Antigenic Shift – உலகம் முழுவதும் விரகக் காரணமாக அமையும்.

Antigenic drift – இன்புளுவெண்சாவிற்கு நிரந்தர நிர்ப்பீடணத்தைப் பெற முடியாமைக்குக் காரணமாக அமையும். ஒரு பிரதேசத்தில் பரவல் காரணம்.

1997இல் H1, N1 – Avion இன்புளுவெண்சா உருவானது இதுவே பறவைக்காய்ச்சல் எனப்பட்டது.. இது 2016இல் 15 நாடுகளில் காணப்பட்டது.

தற்போதைய பன்றிக்காய்ச்சல் 2009இல் மெக்சிக்கோவாவில் பரவியது. Antigenic drift – ஏற்படுவதால் இது பரவும் தன்மையைப் பெறுகின்றது.

பரம்பரை அலகு விகாரத்தினால் இலங்கையின் வடபகுதியில் குறிப்பாக வன்னியில் மக்களின் சுவாசப்பைகள் யுத்த வடுக்களைக் கொண்டவை.

பாதிக்கப்பட்ட சுவாசப்பைகளில் தொற்றும் இன்புளுவெண்சா வைரஸ் Antigenic drift – அடைவதற்கான சாத்தியம் அதிகம்.

யுத்த எச்சங்களின் பாதிப்பு மனிதரை மாத்திரமல்ல, வைரசுகளையும் தாக்கக்கூடியன. குறிப்பாக மீள்குடியமர்ந்த பிரதேசங்களின் சூழலில் குண்டு வீச்சுக்களின் இரசாயன நச்சு எச்சங்கள் சூழலில் இருக்கலாம்.

இவையும் வைரசின் புரதத் தொகுப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். Antigonic drift இனை ஏற்படுத்தி இருக்கலாம்.

அதாவது யத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் எமது மக்களுக்கு இக் கிருமி தாக்கும்போது விகாரமடைந்த கிருமியாக மாறும் சாத்தியம் அதிகம்.

இதுவே தற்போது வடபகுதியில் இந்நோயின் தாக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமையலாம். மாறாக மழைபெய்தபின் ஏற்பட்ட மாற்றம் அல்ல.

மீள் குடியேறிய பகுதிகளில் யுத்த நச்சுக்கள் பற்றிய சூழலியல் ஆய்வு மேற்கொள்ளாமை பெரிய தவறாகும்.

நோய் அறிகுறிகள்

பன்றிக்காய்ச்சல் மூன்று நிலைகளில் பரவுகின்றது. முதல் நிலையில் நோயாளிக்கு குறைந்த நிலையில் சளி, இருமல், தொண்டைவலி இருக்கம். சிலருக்கு வாந்தி அல்லது வயிற்றோட்டம் இருக்கும்.

இவர்கள் 1 – 2 நாட்கள் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். குடும்ப அங்கத்தவர்களுக்கு தொற்று ஏற்படாது பாதுகாக்க வேண்டும். இரண்டாம் நிலையில் அதிக காய்ச்சல், தொண்டை வலி என்பன இருக்கும்.

மூன்றாம் நிலையில் மூச்சுவிடக் கடினமாகும், நெஞ்சுவலி ஏற்படும், குருதி அமுக்கம் குறைவடையும். இவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டே சிகிச்சை வழங்கப்படல் வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் நோய் குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கின்றது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் சோர்வாக காணப்படுவர். தொடர்ச்சியான கடுமையான காய்ச்சல் காணப்படும்.

வேகமாக மூச்சு எடுப்பர். சுவாசிக்கக் கஸ்ரப்படுவர். வாந்தி எடுப்பர், தோல் நீலநிறமாக மாறலாம். நீராகாரங்களை எடுப்பதைத் தவிர்ப்பர். காய்ச்சலுடன் சளி, இருமல் காணப்படும். தோலில் சிவப்புப் புள்ளிகள் ஏற்படலாம்.

பன்றிக்காய்ச்சல் கிருமி குளிரான இடத்தில் 2 நாட்கள் உயிருடன் இருக்கும். ஏனைய இடங்களில் பல மணிநேரம் உயிருடன் இருக்கும். நோயக்கிருமி நோயாளி இருமும்போதும், தும்மும்போதும் காற்றில் பரவும்.

சளித்திவலைகள் மூலம் பரவும். இத் திவலைகள் கதிரை, மேசை, கைபிடி போன்ற இடங்களில் உள்ளபோது தொடும்போது கையில் ஒட்டிக் கொள்ளும். பின் அதனை கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் தொடும்போது தொற்றிக் கொள்ளும்.

நோயரும்பு காலம் அதாவது கிருமி தொற்றி நோய் அறிகுறி ஏற்படும் வரையான காலம் 1 – 3 நாட்கள் ஆகும்.

பொதுவாக நோய் அறிகுறிகள் காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சுவிடுதல் சிரமம், நெஞ்சுவலி, மயக்கம், சளியுடன் இரத்தம் வெளிவரல் என்பனவாகும்.

சலரோக நோயாளிகளில் குருதியில் வெல்லத்தின் அளவு கட்டுப்பாட்டில் அமையாது. மனச்சோர்வு ஏற்படும். இருமல் சில கிழமைகளுக்குத் தொடரும்.

பன்றிக்காய்ச்சல் நோய் பரவாது இருப்பதற்கு உரிய அறிவுரைகள்

உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பன்றிக்காய்ச்சலில் இருந்து காப்பாற்ற விழிப்படையுங்கள்.

கைகளைச் சவர்க்காரத்தினாலும், தண்ணீராலும் நன்கு கழுவவும். இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டையை உபயோகிக்கவும், முகத்தைமூடி முகக்கசவம் (MASK) உபயோகிக்கலாம்.

கண், மூக்கு, வாயினை கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும். தினமும் நன்றாகக் குளிக்க வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வீட்டில் குழந்தைகளை கைகழுவாது தூக்காதீர்கள்.

போசணையான உணவுகளை உண்ண வேண்டும்.

நோய்கிருமி பெருகுவதைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்படும்.

நோயினை உறுதிப்படுத்தல்

பொதுவாக ஆய்வுகூடப் பரிசோதனைகள் தேவைப்படுவதில்லை. நோயாளியின் சரிதத்தில் இருந்து நோய்நிலையினை உய்த்தறியலாம்.

நோயாளியின் சளித்திவலையில் அல்லது தொண்டையில் இருந்த பெற்ற சளி மாதிரி நோயக்கிருமியினை உறுதிப்படுத்தலாம்.

மேலும் தொடர் குருதிப் பரிசோதனை மூலம் பிறபொருள் எதிரியினளவை அளவிட்டும் நோயினை உறுதிப்படுத்தலாம்.

நோய்க்கான சிகிச்சை

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வேதனையை அனுபவிப்பவர்களாகக் காணப்படுவர்.
அவர்களுக்க உடல் நோவினை நீக்கவும், காய்ச்சலை நீக்கவும், பரசிற்றமோல் மாத்திரைகளை வயதிற்கும், நிறைக்கும் எற்ப அளிக்கலாம்.
போதிய நீராகாரம் வழங்கப்படல் வேண்டும். ஜீவனியினைப் பாதிந்துரைக்கலாம்.
படுக்கையில் ஓய்வு தேவை.

இந்நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதால் பக்றீரியாத் தாக்கம் ஏற்படலாம். எனவே பக்றீரியாவை எதிர்கொள்ளும் நுண்ணுயிர் கொல்லியும் வழங்கப்படல் வேண்டும்.

Tamiflu டாயி புறா மருந்து வைரசின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும். இதனை 5 நாட்களுக்கு கடுமையான நோயாளிக்கு அளிக்கலாம்.

போதிய போசணை உள்ள ஆதாரங்களை எடுத்தல் வேண்டும்.

சிறுவர்கள், முதியவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் போதிய கவனம் எடுத்தல் வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் விழிப்பு

வென்றிடுவோம் பன்றிக்காய்ச்சலினை இன்று

சென்றிடுவோம் வைத்தியத்திற்கு – நன்று

நின்றிடுவோம் எவர் எதிரில் இருமாது – என்றும்

கழுவிடுவோம் கைகளை மீண்டும் மீண்டும்

கண், வாய், மூக்கினைக் கைகளால் தீண்டாது

காத்திடுவோம் கிருமி பரவலை என்றும்.

இருமல், காய்ச்சல், சளி இவற்றுடன்

உடல்வலி, தொண்டைநோ

இவையே பிரதான அறிகுறிகள்

உடற்களைப்பு, சோர்வு, வாந்தி

உடன்சேர்ந்து காணப்படலாம் இத் தீத்துக்கள் சுரத்தில்

மூச்செடுத்தலில் சிரமம், வயிற்றோட்டம் உடன்

மனச்சோர்வும் காணப்படலாம்.

போதிய நீராகாரம் அவசியம் நோயுறின்

உடற் சுத்தம் அவசியம்

சுவாசக்காப்பு அவசியம்

போசணை மிக்க உணவு அவசியம்.

காச்சல் தணிப்பு மருந்தாக பரசிற்றமோல் அவசியம். விழிப்படைவோம் விழித்திடுவோம்.

வைத்தியர் சி. யமுனாநந்தா (MBBS, DTCD)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com