இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு!

இலங்கையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் சிறந்த செயற்பாடு என, ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான பிரதி இராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்பு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை சார்பில் இந்தக் கலந்துரையாடலில் வௌிவிவாகர அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் கலந்து கொண்டார்.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கம் குறித்த முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும், இந்த முயற்சிகள் பேண்தகு அடிப்படையில், துரிதமாக நடைபெற வேண்டுமெனவும் தோமஸ் செனன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இணங்கிக் கொள்ளப்பட்ட அடிப்படையில் இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஐ.எஸ் போன்ற தீவரவாத அமைப்புக்கள் மற்றும் வடகொரியாவின் அனுவாயுத பரிசோதனைகளால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com