இலங்கையின் உலக சாதனையை இலங்கையுடனான போட்டியில் முறியடித்தது ஆஸ்திரேலியா

 

Australia's James Faulkner, center, celebrates the wicket of Sri Lanka's Dhananjaya de Silva with teammates during their first twenty20 cricket match in Pallekele, Sri Lanka, Tuesday, Sept. 6, 2016. (AP Photo/Eranga Jayawardena)

டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி தமது இருபது ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்களை எடுத்து இந்தச் சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் கென்ய அணிக்கு எதிராக இலங்கை அணி ஒரு போட்டியில் பெற்றிருந்த 260 ஓட்டங்களே டி 20 சாதனையாக இருந்தது.
சிறப்பாக ஆடிய கிளென் மேக்ஸ்வெல் 65 பந்துகளில் 145 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சில நாட்கள் முன்னர்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 444 ஒட்டங்களை எடுத்து சாதனைப் படைத்தது.
அவ்வகையிலான போட்டியிலும் முந்தையச் சாதனை இலங்கை அணியின் பெயரிலேயே இருந்தது.

ஆஸ்திரேலியாவுடனான இப்போட்டியில் இலங்கை அணி 20 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com