இலங்கைப் பிரஜைகளிற்கு மாதாந்த அடிப்படைச் சம்பளம் நிர்ணயிக்க அரசு தீர்மானம்

இலங்கைப் பிரஜை ஒவ்வொருவரும் மாதாந்தம் பெற வேண்டிய ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான அறிவிப்பை பிரதமர் விரைவில் முன்வைப்பாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹசிம் நேற்று (28) தெரிவித்தார். அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமன்றி பொதுவாக அனைத்து ஊழியர்களுக்கும் நடைமுறைக்கு வரும் வகையிலேயே ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் பற்றிய அறிவிப்பு முன்வைக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகின் பல நாடுகள் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளத்தைக் கொண்டுள்ளன.

சுவீடன் நாட்டில் நாளொன்றுக்கு கட்டாயம் வேலை செய்ய வேண்டிய நேரம் 06 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டுள்ளன. எனினும் அதற்காக அவர்களின் வழமையான சம்பளத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதனால் இலங்கைப் பிரஜைகளுக்கும் ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் அறிமுகம் செய்து வைக்கப்படல் வேண்டும் என பிரதமர் விரும்புகின்றார்.

அதற்கான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் மக்களுக்கு பிரதமர் அந்த அறிவிப்பை முன்வைப்பாரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்துள்ளது என்றால் அதற்கு கட்சி ஆதரவாளர்களின் அர்ப்பணிப்புடனான செயற்பாடே காரணமாகும். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பங்களைப் பெற்றுத்தரும் ஆண்டாக இவ்வருடம் பிரகடனம் செய்யப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com