சற்று முன்
Home / செய்திகள் / இலங்கைத் தமிழர் லண்டனில் கத்தியால் குத்திக் கொலை

இலங்கைத் தமிழர் லண்டனில் கத்தியால் குத்திக் கொலை

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தெற்கு லண்டனில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அருனேஸ் தங்கராஜா என்ற 28 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3.30 அளவில் தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த அருனேஸுக்கு லண்டனில் குடும்பம் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலமானமதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com