இலங்கைக்கு மொத்தக் கடன் 10.2 ட்ரில்லியன்!

மக்கள் விடு­தலை முன்­னணி தலைவர் உண்­மை­யான கடன் தொகை குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என கூறி­யி­ருந்தார். எனினும் நான் வரவு செல­வுத்­திட்­டத்தில் மூன்­றாண்­டுக்கு செலுத்த வேண்­டிய கடன் தொகை­யையே குறிப்­பிட்டேன்.  நாட்டின் மொத்த கடன் தொகை 10.2 ட்ரில்­லி­ய­னாகும் என நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர சபையில் தெரி­வித்தார்.

நாடா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பின் இறுதி நாள் விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மக்கள் விடு­தலை முன்­னணி தலைவர் உண்­மை­யான கடன் தொகை குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என கூறி­யி­ருந்தார். எனினும் நான் வரவு செல­வுத்­திட்­டத்தில் மூன்­றாண்­டுக்கு செலுத்த வேண்­டிய கடன் தொகை­யையே குறிப்­பிட்டேன். எனினும்  நாட்டின் மொத்த கடன் தொகை­யான 10.2 ட்ரில்­லி­ய­னாகும்.

அத்­துடன் தற்­போது கூட்டு எதிர்­க்கட்­சி­யினர் வர­லாற்றை மறந்­துள்­ளனர். மன்­னிக்­கவும் இவர்­களை எதிர்க்­கட்சி என்று கூறு­வ­தனை விட  கூட்டு கும்பல் என்று கூறு­வது சிறந்­தது என்று நினை­க்கின்றேன். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் சபையில் உரை­யாற்­றி­யி­ருந்தார். ஆனால் அவர் நிதி அமைச்­ச­ராக முன்­வைத்த வரவு செல­வுத்­திட்­டங்­களை மறந்­துள்ளார்.

அவர் தனது வரவு  செல­வுத்­திட்­டத்தில் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களை அதி­க­ரித்தார். மக்­க­ளுக்­கான சலு­கை­களை இல்­லாமல் செய்­தனர். இவர்கள் இப்­ப­டியே பட்ஜட் சமர்ப்­பித்­தனர். வாக­னங்­களின் வரியை அதி­க­ரித்­தனர். எனினும் தனது மக­னுக்­காக ரேஸ் கார் வரியை நீக்­கினார். முழு நாட்டை சீர­ழித்த வரவு செல­வுத்­திட்­டத்­தையே முன்­வைத்­தனர். எனினும் நாம் அப்­ப­டி­யல்ல. நாட்டு மக்­க­ளுக்கு செவி­கொ­டுக்கும் அர­சாங்­க­மாகும்.

அர­சியல் ரீதி­யான  மறு­சீ­ர­மைப்­பு­களை முன்­னெ­டுத்து வந்­தாலும் பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பும் அவ­சி­ய­மாகும். பத­விக்கு வந்த பிறகு கருத்து சுதந்­திரம் வழங்­கப்­பட்­டது. அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்­தினோம். முன்­னைய ஆட்­சியின் போது  பொரு­ளா­தார ரீதியில் பாரிய பாதிப்­புகள் ஏற்­பட்­டன. இதனை நாம் சுமக்க வேண்­டி­யுள்­ளது.

கடந்த பத்து ஆண்­டு­களில் உள்­நாட்டை மாத்­திரம் மைய­மாக வைத்து பொரு­ளா­தார கொள்கை வகுக்­கப்­பட்­டது. மறை­முக வரியை விடவும் நேரடி வரியை அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். முத­லீ­டு­களை அதி­க­மாக நாட்டுக்கு கொண்டு வரவுள்ளோம். பசுமை பொருளாதாரத்தை கொண்டு வரவுள்ளோம். மூலதன சந்தையை விரிவாக்கவுள்ளோம். போட்டித் தன்மையை அதிகரிப்பதன் ஊடாக பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். ‍எனவே போட்டியிட நாம் தயாராக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com