இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த பிரித்தானியாவிடம் வலியுறுத்தல்

இங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் புலம்பெயர் தமிழர்களான சிவரஞ்சன் கணபதிப்பிள்ளை தலைமையில், சிவதீபன் நகுலேஸ்வரன், புவிதா பாலச்சந்திரன், அஷந்தன் தியாகராஜா ஆகியோர் ஒன்றிணைந்து பிரித்தானியாவின் ஹறோ கிழக்கு மாகாண ஆளும் கட்சி நா.உ பொப் பிளக்மனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பின் போது பிரித்தானியா தெடரந்து இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதன்போது ஸ்கொட்லாந்து காவல்துறை இலங்கையின் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டமை தொடர்பான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது இலங்கையில் இடம்பெற்ற ஆட்கடத்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்திரவதை முகாம்கள் போன்றவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
ஆயுத விற்பனை குறித்து நா.உ கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தக செயலரின் கவனத்திற்கு குறித்த விடயத்தை எடுத்து செல்வதாகவும், பிரி.பாராளுமன்றில் Early Day Motion ஒன்று நடைபெறும் போது தான் அதில் பங்கு கொள்வதாகவும், அதிரடிப்படைப் படை பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில் இப் பயிற்சியானது முறைப்படி கண்காணிக்கப்படுகிறதா என தாம் ஆராய்வதாகவும் கூறினார்.

இதே வேளை 2012 ஆம் ஆண்டு அன்றைய பிரித்தானியப்பிரதமர் டேவிட் கமரூனுடன் தான் இலங்கை சென்றிருந்த வேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் நிலைப்பாடு குறித்து தனிபபட்ட சந்திப்பொன்றை தாமும் பிரதமரும் விரும்பியதாகவும் அரச அதிகாரிகள் உடன் இருந்தமையால் த.தே.கூ.வுடனான சந்திப்பு சாத்தியமாகவில்லை என கவலையும் விசனமும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com