சற்று முன்
Home / செய்திகள் / இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட 29 சிறார்களின் விபரம் வெளியிடு

இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட 29 சிறார்களின் விபரம் வெளியிடு

போரின் இறுதிக்கட்டத்தில் மக்கள் படையினரிடம் சரணடைந்த பின்னர் இலங்கை படையினரிரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், போரின் கடைசி நாளில் இலங்கை படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் பெயர் விபரங்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பலரது விபரங்கள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், 29 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளனர். அவர்களில் பலரும் 5 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com