இறுதிக் கட்ட போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டதாக பிரித்தானிய ஊடகம் புகைப்பட ஆதாரங்கள் வெளியிட்டது

Vakeesam 01இலங்கையின் இறுதிக் கட்ட போரின்போது கொத்து குண்டுகள் வீசப்பட்டதாக புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ள பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன் நாளிதழ் கொத்துக் குண்டுகள் பெரும்பாலும் மோதல் தவிர்ப்பு வலயங்களிலேயே வீசப்பட்டிருப்பதாக குற்றஞசாட்டியுள்ளது.

சர்வதேச அளவில் க்ளஸ்டர் கொத்து குண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்  இலங்கை உள்நாட்டுப் போரின்போது சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்து குண்டுகளால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை  இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். Vakeesam 02

கொத்துக் குண்டுகள் எதுவும் பயன்படுத்தவில்லை என இலங்கை அரசு கூறிவரும் நிலையில்  இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசியது உண்மைதான் என்று  தி கார்டியன் நாளிதழ் வன்னியிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறும் புகைப்படங்களை ஆதாரங்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

மிதிவெடி அகற்றும் பணியின்போது கொத்துக் குண்டுகளின் 42 பாகங்கள் ஆனையிரவு, பச்சிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தி கார்டியன்  அவற்றின் படங்களையும் வெளியிட்டுள்ளது.

இறுதிப் போரின்போது தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் எனவும் தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகா ராணுவ தளபதியாக இருந்தார் என்றும் அந்த நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.vakeesam 03

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஹலோ டிரஸ்ட் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதன் முன்னாள் ஊழியர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் கார்டியனின் செய்தி இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

vakeesam 04

 

இணைப்பு

தி காடியன் வெளியிட்ட செய்தி ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds