இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – அந்தோனிமலை 1பீ இலக்க தேயிலை மலையில் ஆறு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பம் 05.06.2016 அன்று மதியம் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுத்தை நல்லதண்ணியில் உள்ள வனஜிவராசி தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த மாதமும் இப்பகுதியில் சில சிறுத்தைக்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.IMG_5645 IMG_5671

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com