இறந்த ஆத்மாக்களையும் பொங்கல் விழாவிற்கு அழைத்துச் சொன்றாரா யாழ் அமைச்சர் ?

பிரதமரின் ஊடகப் பிரிவு, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மற்றும் யாழ் மாவட்டச் செயலகத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்ப்பட்டடியலிற்கு மாற்றாக யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் ஒருவர் தன்னிடம் சிபாரிசு பெற்ற சில ஊடகங்களிற்கு மட்டும் உயர்பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொள்ளும் அனுமதியை பாதுகாப்பு வலய முன்னரங்க சோதனை அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுச் சென்ற விசித்திர சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை பொங்கல் விழாவின் போது நடைபெற்றுள்ளது.

அமைச்சர் கொடுத்த பெயர்ப்பட்டியலிலும் யாழ்ப்பாணம் சாராத பெரும்பான்மை இனத்தவர்கள் மூவரின் பெயர்கள், வெளிநாடு சென்றுவிட்ட இரு ஊடகவியலாளர்களின் பெயர்கள் மற்றும் கடந்த ஆண்டு இறந்துபோன ஊடகவியலாளரின் பெயர் என குளறுபடி மிக்க பெயர்கள் இருந்ததாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உயர்பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரதமரின் ஊடகப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துகொள்ளும் ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டதோடு போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் உயர் பாதுகாப்பு வலைய நுளைவாயில் வரை சென்றிருந்த ஊடகவியலாளர்கள் குழு ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சர் ஒருவரின் திருகுதாளத்தால் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அனைவரும் தங்கள் வீடுகளில் பொங்கல் பொங்கி வழிபாடு நிகழ்த்த, அதிகாலை ஊடகவியலாளர்கள் குழு பொங்கல் நிகழ்வுகளை பதிவு செய்ய புறப்பட்டிருந்தது. உயர் பாதுகாப்பு வலைய நுளைவாயில் வரை சென்றிருந்த ஊடகவியலாளர்கள் குழுவினரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு பிரிவினர் கைகளில் பிரதமரின் ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்டடிருந்த ஊடகவியலாளர் விபர பட்டியல் இருக்கவில்லை. அதிகாரிகள் கையிலிருந்த பட்டியல் வந்து சேர்வதற்குள் அதிரடியாக உள் நுளைந்த அமைச்சர் ஒரு பெயர்ப்பட்டியலைக் கொடுத்து இவர்கள் தான் ஊடகவியலாளர்கள் இவர்களை அனுப்புங்கள் என உத்தரவு பிறப்பித்து சென்றுவிட்டார்.

இதனால் உட் செல்ல முடியாத பல ஊடகவியலாளர்கள் நிகழ்வுகளைப் புறக்கணித்துத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com