சற்று முன்
Home / செய்திகள் / இராணுவம் மீது ஐ.நாவால் போர்க்குற்றம் சுமத்தப்படவில்லை – புலம்பெயர் புலி ஆதரவாளர்களே அதனை முன்வைக்கின்றனர் – இராணுவ வெற்றி விழாவில் மைத்திரி

இராணுவம் மீது ஐ.நாவால் போர்க்குற்றம் சுமத்தப்படவில்லை – புலம்பெயர் புலி ஆதரவாளர்களே அதனை முன்வைக்கின்றனர் – இராணுவ வெற்றி விழாவில் மைத்திரி

சில ஊடகங்களும் இனவாத அமைப்புக்களும் தவறாக குறிப்பிடுவதைப் போன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளிலும் எமது பாதுகாப்பு படையினர் மீது போர்க் குற்றங்கள் சுமத்தப்படவில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் அரசுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் எதிரான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சார்பானவர்களே இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

நாடாளுமன்ற விளையாட்டரங்கிலுள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்ற தேசிய இராணுவ தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இராணுவத்தினரையும் தீவிரவாதிகளையும் சிலர் சரியாக இனங்கண்டு கொள்ளாமை கவலைக்குரிய விடயமாகும். பணத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும்கூட இன்று இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலான வேறுபாட்டை சரிவர புரிந்துகொள்ள முடியாதுள்ளது.

எமது சிந்தனைகள், தேசத்தின் அடையாளங்கள், மரபுரிமைகள், பண்பாடு என்பவற்றுடன் நாட்டினதும் மக்களினதும் இராணுவத்தினரதும் கௌரவத்தை பேணும் வகையில் சகலரும் செயற்பட வேண்டும். தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரம்மிக்க இராணுவத்தினருக்கு என்றும் தேசத்தின் மரியாதை உரித்தானது என்பதுடன், இராணுவத்தினருக்கு வழங்கக்கூடிய உயரிய கௌரவத்தையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி தேவைகளை நிறைவேற்றவும் அரசு தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படும்.

சில அரச ஊடகங்களும் இன்று இராணுவத்தினரை கௌரவிக்க மறந்து போயுள்ளதுடன், சில தனியார் ஊடக நிறுவனங்களும் தற்போதைய அரசு இராணுவத்தினரின் நன்மைக்காக மேற்கொள்ளும் செயற்திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடாமை கவலைக்குரியதாகும்.

உயிர்த்தியாகம் செய்து தாய் நாட்டுக்காக இராணுவத்தினர் செய்த அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து அவர்களுக்கு கௌரவத்தை வழங்க வேண்டியது சகலரதும் பொறுப்பாகும். இராணுவத்தினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளின் கைபொம்மைகளாக செயற்படக்கூடாது என்பதுடன், அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவோ அதிகாரத்தை பெற்றுள்ள அரசைக் கவிழ்ப்பதற்கோ அல்லது அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவோ இராணுவத்தினரை உபயோகிக்கக்கூடாது.

மிலேச்சத்தனமான தீவிரவாத போர் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த எண்ணங்கள் இன்னும் முற்றாக இல்லாதொழிக்கப்படவில்லை என்பதுடன், நாட்டிற்கு வெளியே இன்றும் தனியான ஈழ நாடு பற்றிய கனவினைக் கொண்டுள்ள இனவாதிகள் காணப்படுவதுடன் அவர்களது அந்த கனவு நிறைவேற ஒருபோதும் நான் இடமளிக்கப் போவதில்லை.

கடந்த மூன்றரை வருட காலத்தினுள் அரசு எமது நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணங்களை தோற்கடிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன், தொடர்ந்தும் அவ்வாறே செயற்படும் என்றார்.

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com