இராணுவத் தளபதியை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்தித்தார்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் பாதுகாப்பு ஆலோசகருமான ரொபின் மூடிக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(11) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இராணுவத் தலைமையகத்துக்கு வருகை தந்த உயர்ஸ்தானிகரை இராணுவத்தளபதி மற்றும் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க இணைந்து வரவேற்றனர். 

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு தலைவர்களும் இருநாட்டு பரஸ்பர உறவுகள் நட்புறவுகள் குறித்தும் கலந்துரையாடினர். அதன் போது கருத்து தெரிவித்த மூடி புத்தாண்டு குறித்து இராணுவத்தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவத்தினரின் சமூக சேவைகள், குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் பொதுமக்களுக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலன்கள் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி, வடக்கு கிழக்கில் ஒவ்வொரு பொதுமக்களுக்காகவும் மாவட்ட செயலகங்கள், நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக திட்டங்கள் குறித்தும் விளக்கங்களை தெரிவித்தார்.

மேலும் இடம்பெற்ற சந்திப்பினை நினைவு கூரும் விதமாக நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com