இராணுவத்தால் கீரிமலையில் சுகாதார சீர்கேடு.

கீரிமலைப் பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினர் மலக்கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை கொட்டி வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு உள்ளதாகவும்,  நிலத்தடி நீர் மாசடைவதுடன்,அப்பகுதியில் மீளக்குடியேறிய மக்கள் தூர்நாற்றத்திற்கு மத்தியில் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் தெரிவித்துள்ளார். 

தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றது.  அதன்போதே அவ்வாறு தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த தெல்லிப்பழை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகனன், கீரிமலை பகுதியில் முன்னர் வலி.தெற்கு மற்றும் வடக்குப் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டி வந்தனர்.
அவர்களிடம் கழிவுகளை கொட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க கழிவுகளை கொட்டுவதை நிறுத்திவிட்டார்கள். அதேபோன்று இராணுவம் மற்றும் கடற்படையினரிடமும் கோரி இருந்தோம். என தெரிவித்தார்.
அதன் போது போது நான்கு நாட்களுக்கு முன்னரும் இராணுவ தரப்பினர் அப்பகுதியில் கழிவுகள கொட்டி உள்ளனர் என தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்தார்.
இதன்போது, கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இது தொடர்பில் உத்தியோகபூர்வமான கடிதம் ஒன்றை எழுதி, உரிய இராணுவ அதிகாரிக்கு கையளித்தால் அவர்கள் அவ்விடத்தில் மலக்கழிவு உள்ளிட்ட கழிவுகளை கொட்ட மாட்டார்கள் எனவும் அதற்கான நடவடிக்கையினை உடனடியாக தெல்லிப்பழை பிரதேச செயலர் முன்னெடுக்குமாறும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com