இராணிவத்தை – பம்பரகலை வீதி புனரமைப்பு – அமைச்சர் திகாம்பரம்

குன்றும் குழியுமாக காணப்பட்ட மக்கள் பாவனைக்குதவாத இராணிவத்தை – பம்பரகலை தொழிற்சாலை முன்னிலிருந்து குட்டிமலை தோட்ட வழியாக மிடில்வத்தை வரையிலான 2 கிலோ மீற்றர் வீதியை புனரமைக்க 1 கோடியே 20 இலட்சம் ரூபா செலவிற்கான முதல் கட்ட பணிகள் 13.11.2016 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும் வழிகாட்டலின், வீதி அபிவிருத்தி அதிகாரசபை புனரமைப்பு திட்டத்தின் கீழ் மேற்படி பாதை காபட் கொண்ட பாதையாக அமைப்படவிருக்கின்றது.

இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன் என பலரும் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு, பாதை புனரமைப்புக்கான பணிகளையும் ஆரம்பித்து வைத்தனர்.dsc03665 dsc03673 vlcsnap-2016-11-13-18h18m56s199 vlcsnap-2016-11-13-18h19m38s121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com