இரவில் நித்திரையில் ஆழ்ந்திருந்த பெண்களிடம் தங்க சங்கிலிகள் கொள்ளை

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை கிறேக்கிலி மற்றும் பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களில் நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்கள் மர்மமான முறையில் வீடுகளுக்கு நுழைந்து நித்திரையில் ஆழ்ந்திருந்த பெண்களிடம் தங்க சங்கிலிகளை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் 04.05.2017 அன்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான மர்மமான முறையில் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் அடையாள பொருளாக டோச் லைட்டை விட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்யும் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை மலையக பிரதேசங்களில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஆலயங்கள், வீடுகள் என பல்வேறுப்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து வந்தமை தெரிந்த விடயமாகும்.

ஆனால் இக் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்ட கொள்ளையர்களை கைது செய்ய முடியாத தொடர்ந்து வருவது வழக்கமாக காணப்படுகின்றது.

சமீப காலமாக கொள்ளை நடவடிக்கைகள் தடைபெற்று இருந்த நிலையில் மீண்டும் கொள்ளை சம்பவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நள்ளிரவு பத்தனை கிறேக்கிலி தோட்டத்திலும் மற்றும் பொரஸ்கிறிக் தோட்டத்திலும் கொள்ளை சம்பங்கள் இரண்டு அரங்கேற்றமாகியுள்ளது.

அதேவேளையில் கிறேக்கிலி தோட்டத்தில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஒரு வீட்டில் பெண் ஒருவரின் தங்க சங்கலியை அபகரித்த பொழுது அப்பெண் கூச்சலிட்டதால் தப்பியோடும் நிலையில் சங்கிலியின் பாதி துண்டை அறுத்துச் சென்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் மலையகத்தில் தொடரவிருக்காமல் இருக்க கொள்ளையர்கள் விட்டு சென்ற அடையாள பொருளின் கைரேகைகளை பதிந்து கைது நடவடிக்கையில் பொலிஸார் ஈடுப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com