இரண்டு வருடத்தில் ஒதுங்கிவிடுவேன் என்ற விக்கிக்கு இரண்டாவது தடவை பதவி எதற்கு – சுமந்திரன் கேள்வி

வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜாவே களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை மீண்டும் நிறுத்­தத் தமக்கு உடன்­பா­டில்லை என்று யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­யா­ளர் சந்­திப்­பில் ஆபிரகாம் சுமந்திரன் இவ்வாறு தெரி­வித்திருக்கிறார்.

தான் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மட்­டுமே பத­வி­யில் இருப்­பேன் என்­றும் மிகுதி இரண்டு வரு­டங்­க­ளும் மாவை தம்பி பார்த்­துக் கொள்­வார் என்­றும், அவர் பத­வி­யைப் பொறுப்­பேற்க வேண்­டும் என்­றும் கூறியே விக்கினேஸ்வரன் அர­சி­ய­லுக்­குள் வந்­தாக தமது கட்­சி­யி­ன­ரி­டம் கூறியிருந்ததாகச் சாடியிருக்கும் ஆபிரகாம் சுமந்திரன் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இத­னைக் கூறும் போது தான் மட்­டும் இருக்­க­வில்லை, தமது கட்­சி­யின் பிர­தி­நி­தி­கள் பல­ரும் இருந்­த­னர். அர­சி­ய­லுக்­குள் வரும்­போதே இரண்டு வரு­டத்­துக்­குத்­தான் இருப்­பேன் என்று கூறி­ய­வரை நாம் தொடர்ந்­தும் கஷ்­டப்­ப­டுத்த விரும்­ப­வில்லை என்ற கோணத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அத­னா­லேயே வடக்கு மாகாண சபை­யின் அடுத்த தேர்­த­லில் கூட்­ட­மைப்­பின் சார்­பாக முதல்­வர் வேட்­பா­ள­ராக விக்­னேஸ்­வ­ரனை நிறுத்த எண்­ண­மில்லை என்­பதை கூறிக் கொள்­வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com