சற்று முன்
Home / செய்திகள் / இரண்டு பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை ? – வவுனியாவில் சம்பவம்

இரண்டு பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை ? – வவுனியாவில் சம்பவம்

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03.2019) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணோருவரும் இவர்களுடன் இருந்துள்ளார். இந் நிலையில் நேற்றிரவு 11.30 மணிக்கு பின்னர் குறித்த பெண்ணிற்கு கணவர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார்.

எனினும் பெண் அழைப்பினை எடுக்கவில்லை. சந்தேகத்தில் அயல் வீட்டார் ஒருவருக்கு பெண்ணின் கணவன் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு மனைவி தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை சற்று சென்று அவதானித்து தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அயல் வீட்டார் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நேரத்தில் பெண்ணின் இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கிக்கொண்டிருந்தனர்.

குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டின் அறையினை சென்று பார்வையிட்ட சமயத்தில் வீட்டின் ஒர் அறையில் இரத்தம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணை வீடு முழூவதும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் ஒதுக்குப்புறத்தில் காணப்படும் பாவனையற்ற கிணற்றினை எட்டிப்பார்வையிட்ட சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸாரினால் கிணற்றிக்கு செல்லும் பாதையில் கத்தியொன்றையும் மீட்டேடுத்துள்ளனர். வெட்டிக்கொலை செய்து விட்டு கிணற்றில் தூக்கி எறிந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 11 மற்றும் 5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் கௌரி (வயது -32) என பொலிஸார் தெரிவித்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com