இரண்டு கோடி விடயத்தில் ஆர்ப்பரிக்கும் கூட்டமைப்பு – கழிவு ஒயில் பிரச்சனையை கண்டுக்காதது ஏன் ? சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது இலஞ்ச குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின்னர் நொந்துபோய் மாறி மாறி கருத்துக்களை வெளியிடுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுன்னாகம் கழிவொயில் பிரச்சனையின் போது வாய் திறக்காமல் இருந்ததற்கான காரணம் என்ன?
குறித்த கழிவொயில் எண்ணெய் கலப்புக்கு காரணமான நிறுவனத்தை கொண்டு வந்தவரே அந்தப் பகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தான். ஆகையால் தான் அந்த விடயத்தில் ஒருவரும் பேசாது மௌனம் காத்தார்களா? இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (23) நடைபெற்ற சந்திப்பிலேயே சுரேஸ்பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார். ஆங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்..
தற்போது உள்ளூராட்சி தேர்தலை மையமாக வைத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு பொய் கூற ஆரம்பித்துள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தாம் தான் காரணம் எனவும், காணி விடுவிப்பும் தம்மால் தான் நடைபெறுகின்றது எனவும் கூறி வருகின்றனர்.

எனினும் அரசியல் கைதிகளுடைய விடுதலை கூட்டமைப்பின் அழுத்தத்தால் இடம்பெறவில்லை. வழமையாக எவ்வாறு ஒரு கைதி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விடுதலை செய்யப்படுகின்றாரோ அவ்வாறே விடுதலை செய்யப்படுகின்றனர். இப்போதும் இராணுவத்தின் வசம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் உள்ளன.
இந்த நிலையில் வழமை போன்று கூட்டமைப்பினர் மக்கள் முன்பு பொய் கூற ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் யாழ் மாநகரசபைக்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனமும் மக்களை ஏமாற்றும் வகையிலேயே உள்ளன.
யாழ்.மாநகர சபையை பழைய இடத்திலேயே கட்டவுள்ளதாக கூறியிருக்கின்றார்கள். இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று யார் ஆட்சிக்கு வந்தாலும் பழைய இடத்தில் யாழ்.மாநகர சபை கட்டப்படத்தான் போகின்றது. இவ்வாறான நிலையில் அவர்கள் வெளியிட்டுள்ள விடயங்கள் நகைப்புக்குரியதாகவே இரக்கின்றன.

குறிப்பாக ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். தற்போது இலஞ்ச குற்றாச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின்னர் மாறி மாறி கருத்துக்களை கூறி வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுன்னாகம் கழிவெண்ணை பிரச்சினையின் போது ஒருத்தரும் வாய் திறக்காமைக்கான காரணம் என்ன?
முக்கள் போராட்டங்களை முன்னெடுத்த போது நாமும் அதில் கலந்து கொண்டிருந்தோம். ஆதற்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றோம். ஆனால் கூட்டமைப்பினர் அந்த விடயத்தில் மௌனமே சாதித்தார்கள். ஏனெனில் குறித்த எண்ணை கலப்புக்கு காரணமான நிறுவனம் வடக்கிற்கு வருவதற்கான காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் தான். ஆகையால் தான் ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. இதே போன்றுதான் ஐஸ்கிறீம் பிரச்சனையிலும் நடந்து கொண்டார்கள். ஆகவே மக்கள் இவற்றை கவனத்திலெடுத்து செயற்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com