இரண்டு கோடி பெறுமதியான கஞ்சா சாவகச்சேரியில் மீட்பு

யாழ்.சாவகச்சேரி மீசாலை மேற்கு பகுதியில் வயல் காணி ஒன்றில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த 231 கிலோ கஞ்சா பொதிகளை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (09) இரவு
மீட்டுள்ளனர்.

மேற்படி பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் மேற்படி கஞ்சா பொதிகள் காணப்படுவதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த கஞ்சா பொதிகளை தாம் மீட்டுள்ளதாக கூறியிருக்கும் சாவகச்சேரி பொலிஸார் இது தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் எவரும் கைது செய்யபடவில்லை. எனவும் மீட்கப் பட்ட கஞ்சா சுமார் 2 கோடி பெறுமதியானது எனவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com