சற்று முன்
Home / செய்திகள் / இரண்டு கோடியே இருபது இலட்சம் ருபா செலவில் புதிய வீதிகள் …

இரண்டு கோடியே இருபது இலட்சம் ருபா செலவில் புதிய வீதிகள் …

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற வீட்டுத் திட்டப் பகுதியில் பிரதமரின் அமைச்சினால் இரண்டு கோடியே இருபது இலட்சம் ருபா செலவில் புதிய வீதிகள் அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் nஐபநேசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தேசிய கொள்கைகள்இ பொருளாதாரவிவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்புஇ வடமாகாண அபிவிருத்திமற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே சிவஞானசோதி அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

மேற்படி அமைச்சினூடாக அப் பகுதியில் புதுpய வீட்டுத் திட்டமொன்று அமைக்கப்பட்ட வருகிறது. இதற்காக அந்தப் பகுதியில் வீதிகளைப் புனரமைப்பதற்காக அமைச்சினால் இரண்டு கோடி இருபது இலட்சம் ருபா ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்படவுள்ள வீதிகளை புனரமைப்பு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள். கிராம சேவையாளர்கள். பொது மக்கள் எனப் பலரும் கலந்த கொண்டிருந்தனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com