இரண்டாவது பதவியேற்பு நிறைவில் பொருளாதார அபிவிருத்தி, வேதன அதிகரிப்பு திட்டங்கள்

தமது இரண்டாவது பதவியேற்பு நிறைவின் போது நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திக்கான பாரிய செயல்திட்டங்களை ஆரம்பிக்கப் போவதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறந்த தொழில் பயிற்சிகளை வழங்குவது மட்டுமின்றி அதற்கேற்ப வேதனங்களை உயர்த்துவதும் அரசாங்கத்தின் எதிர்கால நோக்காகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கல்குடா ஞானீஸ்வர மகாநாயக்க தேரரின் பிறந்த தினத்தையொட்டி ஹிக்கடுவையில் தொழில்பயிற்சி நிறுவனமொன்று நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

படைத்தளபதிகள், அமைச்சர்கள், எம். பி.க்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்-, எமது தேரர் ஒவ்வொரு முறையும் அவரது பிறந்த நாளை இது போன்றதொரு நல்ல காரியத்துடனேயே கொண்டாடுவது வழக்கம். அதன் ஒரு அம்சமே ஹிக்கடுவ தொழிற்பயிற்சி நிலையமாகும்.

தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு தற்போது நாட்டில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நிர்மாணத்துறை வளர்ச்சியுறுகின்ற போதும் தொழில் நுட்பத்துறை முன்னேறும் போதும் கனணி மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னேறும் போதும் கணனி மற்றும் தொழில்நுட்ப தேர்ச்சியுடையோரின் தட்டுப்பாடு நிலவுகிறது.

நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றுலாத் துறை முன்னேறிவரும் இன்றைய சுழலில் திறமையானவர்களை அதற்காகப் பெற்றுக்கொள்வது மிகவும் கஷ்டமாகவுள்ளது. கட்டிடங்களை நிர்மாணிப்பது அல்ல.

அவற்றுக்கான வேலைகளை பெற்றுக்கொள்வதே கடினமாக உள்ளது. பல்வேறு துறைகளிலும் பயிற்சி பெற்றோரின் தொகை குறைந்தும் பயிற்சி இல்லாதோரின் தொகை அதிகரித்தும் காணப்படுகிறது. இதனைக் கருத்திக்கொண்டு உரிய பயிற்சிகளை வழங்க அரசாங்கம் பாரிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அரசாங்கத்தின் தொழில் பயிற்சி நிலையங்களை தனியாரோடு இணைந்து மேம்படுத்தவும் தற்போதுள்ள கட்டடங்களில் உச்சபயனைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையோடு கலந்துரையாடி பயிற்சி வழங்தலை அதிகரிக்க உரிய அமைச்சோடு இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

நாட்டில் சிறந்த நல்லிணக்கம், நிலையான அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்திலும் சம ஸ்தீரமான நிலையை நோக்கிப் பயணிக்கின்றோம். இந்த நிலையில் எனது இரண்டாவது பதவியேற்பு நிறைவின் போது பொருளாதார, அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அத்தோடு வேதனத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு செய்யாவிட்டால் பயிற்சி பெற்றோர் வெளிநாட்டுக்கு செல்ல நேரும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com