இரண்டாயிரம் ஏற்றுமதியாளர்களை இலக்காகக்கொண்ட தேசிய நிகழ்ச்சித்திட்டம் யாழில் அங்குரார்ப்பணம்

இரண்டாயிரம் ஏற்றுமதியாளர்களை இலக்காகக்கொண்ட தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்று யாழில் ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச தரத்திற்கு நிகரான ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன் தேசிய ரீதியிலான முதலாவது விழிப்புணர்வு செயலமர்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (23.03.2017) இடம்பெற உள்ளது. வடக்கில் ஏற்றுமதித் துறையில் ஆர்வம் உடைய சிறிய மற்றும் நடத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் இச்செயலமர்வில் கலந்து கொள்ள முடியும்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை நடைமுறைப்படுத்தும் இத்திட்டத்திற்கு அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு அணுசரணை வழங்குகின்றது. இத்திட்டம் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் எண்ணக்கருவில் உதயமானதாகும். இதன் மூலம் 2020 ஆம் ஆண்டில் சுமார் இரண்டாயிரம் புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதே இலக்காகும்.

மாறிவரும் உலக வர்தத்க போக்கிற்கு அமைவாக புதிய தொழில்நுட்ப யுத்திகளை கையாண்டு ஏற்றுமதிகளை மேம்படுத்துவது திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com