சற்று முன்
Home / செய்திகள் / இரண்டாம் உலகப் போரில் முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்த நாள் இன்று

இரண்டாம் உலகப் போரில் முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்த நாள் இன்று

இரண்டாம் உலகப்போரில் 09.05.1945 அன்று பல்வேறு போர் முனைகளில் முக்கிய திருப்பங்கள் ஒரே நாளில் இடம்பெற்றிருந்தது.

 

1940 – இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை ஜெர்மனிய யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.

 

ஒரே நாளில் முக்கிய திருப்பங்கள்

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.

1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் கடைசி ஜெர்மன் படைகள் சோவியத் தளபதி கியோர்கி சூக்கொவ் இடம் சரணடைந்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய இராணுவத் தளபதி ஹேர்மன் கோரிங் அமெரிக்க இராணுவத்தால் கைப்பற்றப்பட்டான்.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நோர்வேயின் அதிபராக இருந்த விட்குன் உயிஸ்லிங் நோர்வேயில் கைது செய்யப்பட்டார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் பிராக் நகரை அடைந்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.

1945 – இரண்டாம் உலகப் போர் : கிழக்குப் போர்முனை ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com