இரண்டரை கோடி பெறுமதியான 130 கிலோ கேரளா கஞ்சா யாழில் மீட்பு

Ganjaஇலங்கையின் யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை, மணற்காடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் பாரியளவான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மது வரி திணைக்களம் மற்றும் கடற் படையினர் இணைந்து நடத்திய சோதனையில், சுமார் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 130 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மணற்காடு பகுதியில் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரும், உடுத்துறை பகுதியில் 30 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (20) அதிகாலை இந்தியாவில் இருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு கொழும்புக்கு கடத்தப்படவிருந்த மேற்படி கேரளா கஞ்சா பொதிகள் தொடர்பாக மது வரி திணைகளத்திற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கடற்படையின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையின் போதே மேற்படி கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், கஞ்சா பொதிகள் மற்றும் படகும் பருத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com