இயல்பு மறுப்புப் போராட்டம் – முற்றாக முடங்கியது வடக்கு

யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாணம் முழுவதும் இன்று (25)  முழுகடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை . யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பேருந்துகள் யாவும் கோண்டாவில் சாலைக்குள் முடக்கப்பட்டதால் யாழ் மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் கடந்த 20-ஆம் தேதியன்று வீதியோரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர்.
இவர்களில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், மற்றைய மாணவன் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐந்து போலீஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் யாழ். மாவட்டத்தில் பூரண கடையடைப்பை அனுஷ்டிக்குமாறு அரசியல் கட்சிகள் நேற்று முன்தினம் கோரிக்கை முன்வைத்திருந்தன.
இந்த கோரிக்கையின்படி, இன்றைய தினம் பூரண கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.14581294_1143123959109306_2897441306505878433_n 14610889_1143123812442654_7609824264906589420_n 14656291_1143123765775992_653789485770037971_n 14666130_1143123869109315_6537189924893479318_n 14671290_1143123682442667_269530790764728609_n 14681757_1143123722442663_3128362996557202628_n 14713509_1143123809109321_2826411817573653006_n 14713570_1143123762442659_3410965663273070571_n 14713649_1143123919109310_1172365135273703526_n 14717200_1143123862442649_8583276257277102686_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com