இயற்கை சீற்றம்: உயிரிழப்பு 63 ஆக உயர்வு – 130 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை

160519155339_srilanka_flood_boat_624x351_afpஇலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளதாகவும், 132க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

அதன்படி இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சேத விபரங்கள் வருமாறு,

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை – 103,776

பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை – 425,601

இறப்பு எண்ணிக்கை – 63 பேர்

காயமடைந்தவர்கள் எண்ணிக்கை – 29 பேர்

காணாமல் போணவர்களின் எண்ணிக்கை – 132 பேர்

முற்றிலும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை – 354

பகுதியளவு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை – 3326

பாதுகாப்பு நிலையங்கள் – 597

முகாம்களின் எண்ணிக்கை – 63,370

முகாம்களில் உள்ள மக்கள் எண்ணிக்கை – 319,195 பேர்

கடந்து சில நாட்களாக அடாது பெய்து வரும் பெருமழையால், நாட்டின் அநேக பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மத்திய இலங்கையில் உள்ள மூன்று மலையோர கிராமங்கள் அடர்த்தியான செம்மண்ணால் புதையுண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds