இயற்கையின் சீற்றம்; 37 உயிரிழப்புக்கள்; 21 பேரை காணவில்லை

Bulathkohupitiya (7)நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளதுடன், 21 இற்கும் அதிகமானோர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைக் கூறியுள்ளது.

அதேவேளை 352,374 பேர் வரை பாதிப்படைந்துள்ளதாகவும், 223,687 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் கூறியுள்ளது.

கேகாலை உள்ளிட்ட அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மாவட்டங்களிலேயே உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

அரநாயக்க மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com