சற்று முன்
Home / செய்திகள் / இம்மானுவேல் ஆனோல்ட்டே யாழ் மாநகரசபை மேயர் – சுமந்திரன் அறிவிப்பு – ஈபிடிபியும் ஆதரவு

இம்மானுவேல் ஆனோல்ட்டே யாழ் மாநகரசபை மேயர் – சுமந்திரன் அறிவிப்பு – ஈபிடிபியும் ஆதரவு

யாழ் மாநகரசபை மேயர் இம்மானுவேல் ஆனோல்ட்டே என தமிழரசுக் கட்சி இன்று (14.02.2018) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரசபையின் மேயராக தனது ஆதரவாளரான இம்மானுவேல் ஆனோல்ட்டை நியமிக்க ஆதரவளிக்கவேண்டும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இம்மானுவேல் ஆனோல்ட்டே யாழ் மாநகரசபை மேயர் எனும் தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் குறித்த தீர்மானம் தமிழரசுக் கட்சியின் பங்காளிகளுடன் கூடி எடுக்கப்பட்ட ஏகமாதான தீர்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஈபிடிபி தமிழரசுக் கட்சிக்கு ஆதரவளித்துள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் பங்காளி அமைப்புக்கள் ஊடாக யாழ் மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் சிலர் இம்மானுவேல் ஆனோல்ட்டே யாழ் மாநகரசபை மேயராக தெரிவுசெய்வதனை தொடர்ந்து எதிர்த்துவருவதாகவும் தாங்கள் எதிரணியில் அமர்ந்து சுயாதீனமாக இயங்கப்போவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் எமக்குத் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com