இன ரீதியிலான பிரச்சினைகளை அணுகாது நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியுமா? – நிருபா குணசேகரலிங்கம்

 
newdd2
நாட்டில் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றன. அந் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக சர்­வ­தேச நாடு­களின் நிதி­களும் வந்து சேர்­கின்­றன. அர­சாங்­கமும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் நல்­லி­ணக்கம் பற்­றிய அலு­வ­ல­கங்­களைத் திறந்து வைக்­கின்­றன. இவை எல்லாம் நடை­பெ­று­கின்ற நிலையில் சாதா­ரண மட்­டங்­களில் நல்­லி­ணக்கம் பற்றி பல கேள்­விகள் இருக்­கின்­றன.

அதா­வது, இலங்­கையில் இன முரண்­பா­டுகள் மற்றும் அவ் இன முரண்­பாடு ஆயு­த­மோ­த­ல்கள் அள­வுக்கு விரி­வ­டைந்­த­மைக்கு பல கார­ணங்கள் இருக்­கின்­றன. இக் கார­ணங்கள் தீர்க்­கப்­ப­டாமல் எவ்­வாறு நல்­லி­ணக்­கத்­திற்­கான முன்­ந­கர்­வுகள் நடை­பெ­று­கின்­றன என்­ப­துவே அக் கேள்­வி­யாகும்.
இத­னி­டையேஇ வடக்குக் கிழக்கில் ஆட்சி மாற்­றத்தின் பின்­னரும் பல­த­ரப்­பட்ட இன முறுகல் சம்­ப­வங்கள் நடை­பெற்­றுள்­ளன. அவை பெரி­ய­ளவில் வெளித்­தெ­ரி­ய­வில்லை.

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தமிழ் – – சிங்­கள மாண­வர்­க­ளுக்கு இடை­யி­லான முறுகல் நிலை இவ்­வாரம் மோதல் நிலைக்குச் சென்­றுள்­ளது. இச் சம்­ப­வத்­தினை அர­சாங்கம் இரு இனங்­க­ளி­டை­யான இளைஞர் முரண்­பாடு என பெரி­து­ப­டுத்த விரும்­ப­வில்லை. இரு குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான மோத­லாக வர்­ணிக்­கவே விரும்­பு­கின்­றது. இவ்­வா­றாக இப் பிரச்­சினை கையா­ளப்­ப­டு­வ­தற்கு பல கார­ணங்கள் இருக்­கலாம். அதா­வதுஇ யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரு இன மாண­வ­ரி­டையே மோதல் என்­பது தீயாகப் பரவி நாட்டின் ஏனைய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கும் வன்­முறை பரவும் நிலை ஏற்­ப­டலாம். அந் நிலை சமூ­கங்­க­ளி­டை­யேயும் ஏற்­ப­டலாம் என்ற முன்­னெச்­ச­ரிக்கை உள்­ளது. மேலும்இ நாட்டில் அதிக இன­வா­தத்தின் ஊடாக அர­சியல் அதி­கா­ரத்­தினைக் கைப்­பற்ற நினைக்கும் பொது எதி­ர­ணிக்கும் இவ் விடயம் மேடை­க­ளுக்­கான தொனிப்­பொ­ரு­ளா­கலாம் என்ற நிலை காணப்­ப­டு­கின்­றது. மேலும்இ நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டு­வ­தாக அர­சாங்கம் கூறிக்­கொள்ளும் நிலையில்இ தமிழ் -– சிங்­கள மாண­வர்­க­ளுக்­கி­டையில் மோதல் என்­பது நிலை­மை­களை கேள்­விக்கு உட்­ப­டுத்­தி­விடும் என்ற பிரச்­சி­னையும் உள்­ளது.

தற்­போ­தைய சூழ்­நி­லை­யினை மிகவும் நிதா­ன­மா­கவும் பொறு­மை­யு­டனும் சகல தரப்­பி­னரும் அணுக வேண்­டு­மென்றே நாட்டின் பிர­தான எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் விரும்­பு­கின்றார். அவர் இப் பிரச்­சினை தொடர்பில் பாரா­ளு­மன்றில் கருத்­து­ரைக்­கையில்இ நாட்டில் ஏனைய பல்­ க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் இவ்­வா­றாக நிலவும் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என அர­சாங்­கத்­தினை வலி­யு­றுத்­தி­யுள்ளார். இதன் மூலம் பிரச்­சினை என்­பது சற்று சகல பல்­க­லைக்­க­ழ­கங்­களின் நிலை­மை­க­ளுடன் ஒப்­பி­டப்­பட்டு சமப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது எனவும் கொள்­ள­மு­டி­கின்­றது. பிரச்­சி­னை­யினை இக் கால­கட்­டத்தில் சல­னத்­திற்கு உரி­ய­தாக மாற்­று­வது நல்­லி­ணக்­கத்­திற்­காக மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­களைப் பாதிக்கும் என்ற விழிப்­பு­ணர்வு காணப்­ப­டு­கின்­றது.

இவை ஒரு­பு­ற­மி­ருக்க, மறு­பு­றத்தில் சம­கா­லத்தின் நல்­லி­ணக்க முயற்­சி­களைக் குழப்­பாது உண்­மையில் இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் நீதி­யான –நடு­நி­லை­மை­யான தீர்­வு­க­ளுடன் கூடிய அணு­கு­மு­றைகள் அவ­சி­ய­மா­னது என்­ப­தனை நடை­பெற்ற இரு இன மாணவர் தரப்­புக்­க­ளி­டையே மோதல் சம்­பவம் உணர்த்­து­கின்­றது என்­பது மறுக்க முடி­யா­த­தாகும்.IMG_2392

பல்­க­லைக்­க­ழக மட்­டத்தில் நடை­பெற்­ற­தற்கு அப்­பாலும் பல இன ரீதி­யான பிரச்­சி­னைகள் கிரா­மங்கள்இ இடங்கள் தோறும் ஏதோ ஒரு­வ­கையில் தீர்­வுகள் இன்றி இருந்தே வரு­கின்­றன. யாழ். நகரப் பகு­தியில் கொண்­டாட்ட காலங்­களில் சிங்­கள வியா­பா­ரிகள் – –தமிழ் வியா­பா­ரிகள் இடையே முறுகல் நிலை தொடர்ந்தும் இருக்­கின்­றது. தரு அங்­காடி வியா­பா­ரி­க­ளுக்­கான இட ஒதுக்­குதல் தொடர்பில் அம் முரண்­பாடு இருக்­கின்­றது.

முல்­லைத்­தீவில் தமிழ் மீன­வர்­களின் கரை­வ­லைப்­பா­டுகள் சிங்­கள மீன­வர்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­வ­தனால் பெரும் முரண்­பா­டுகள் இருக்­கின்­றன. இது­போன்று பருத்­தித்­துறை கடல்­ப­ரப்­பிலும் இவ்­வா­றான முரண்­பா­டுகள் இருக்­கின்­றன. கொக்­கு­ளாயில் கடற்­க­ரை­களைப் பகிர்­வதில் சிங்­கள மீன­வர்கள் அடா­வ­டி­களை புரி­வ­தாக தமிழ் மீன­வர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர். அடுத்துஇ வடக்கில் வாழும் பூர்­வீகக் குடும்­பங்கள் ஆயி­ரக்­க­ணக்­கானோர் காணிகள் அற்­றி­ருக்கஇ வடக்கில் சிங்­கள மக்­களைக் கொண்டு வந்து குடி­யேற்­று­கின்­றார்கள் என்ற முரண்­பா­டுகள் சம காலத்­திலும் இருக்­கின்­றன. அண்­மையில் கூட வவு­னி­யாவில் இரா­ணுவக் குடி­யி­ருப்­பொன்று திறந்­து­வைக்­கப்­பட்­டது. இவை தமிழ் மக்­களின் இனப்­ப­ரம்­பலை பாதிக்கும் நோக்­குடன் நடை­பெ­று­கின்­றன என்ற அங்­க­லாய்ப்பும் எதிர்ப்பும் தமிழ் மக்­களின் உள்­ளங்­களில் எதிர்ப்­பாக இருக்­கின்­றன.

தமிழ் மக்­களின் இனப்­ப­ரம்­ப­லையும் அவர்­க­ளது அடை­யா­ளங்­க­ளையும் பாதிக்கும் சிங்­களக் குடி­யேற்­றங்கள் வர­லாற்று ரீதியில் உள்­நாட்டு இன முரண்­பா­டு­க­ளுக்­கு­கான அடிப்­ப­டை­யான கார­ணங்­களுள் ஒன்­றாகும். இவ்­வா­றாக உரு­வாக்­கப்­பட்ட முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் எல்­லை­களில் உள்ள சிறி­புர பகு­தியில் சிங்­கள மக்­க­ளுக்கு புதிய வீடு­களை வீட­மைப்பு அமைச்சு அண்­மையில் அமைத்­துக்­கொ­டுத்­தி­ருந்­தது. இவ்­வீ­டு­களை வீட­மைப்பு அமைச்சர் சஜித் பிரே­ம­தாசா திறந்து வைத்­தி­ருந்தார். இதன் மூலம் அரச ஆத­ர­வுடன் திட்­ட­மிட்ட சிங்­க­ளக்­கு­டி­யி­ருப்­புக்கள் தற்­போதும் வளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்ற அங்­க­லாய்ப்பு மக்­க­ளி­டத்தில் உள்­ளது.

மேலும், பௌத்த விகாரை அமைப்புப் பணிகள் நடை­பெற்றே வரு­கின்­றன. இவற்­றினை முன்­வைக்கும் போது சிலர் நாட்டின் தெற்கில் எத்­த­னையோ தமி­ழர்­களின் ஆல­யங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­ற­னவே? அது­போன்று எவ்­வ­ளவோ தமிழ் மக்கள் வாழ்­கின்­ற­னரே? அது அவ்­வா­றி­ருக்க, வடக்­கிலும் கிழக்­கிலும் மாத்­திரம் எதற்­காக சிங்­கள மக்கள் குடி­யேறும் போதும் பௌத்த விகா­ரை­களை அமைக்கும் போதும் அது நல்­லி­ணக்­கத்­தினைப் பாதிக்­கின்­றது என வினவ முடியும்.

அடிப்­ப­டையில் தென்­னி­லங்­கையில் தமிழ் மக்கள் நிலை­யான சொத்­துக்­களைஇ வீட்­டினை கொள்­வ­னவு செய்­கின்­றார்கள். அதன் மூலம் அவர்கள் குடி­ய­மர்­கின்­றனர். எனவேஇ அங்கு அவர்கள் இனப்­பி­ரம்­பலை பாதிக்கும் வகையில் திட்­ட­மிட்டு குடி­யேற்­றங்­க­ளாகக் குடி­யேற்­ற­வில்லை. இந்த நிலையில் வடக்கில் மேற்­கொள்­ளப்­படும் சிங்­களக் குடி­யேற்­றங்கள் தமிழ் மக்­களைப் பொறுத்­த­ளவில் சிக்­கல்­மிக்­க­வை­யா­கவும் அபா­ய­மிக்­க­வை­யா­க­வுமே உள்­ளன.

இலங்­கையில் நல்­லி­ணக்கம் பற்றி பேசப்­படும் அதே­வேளைஇ இன முரண்­பாட்­டுக்­கு­ரிய விட­யங்கள் அவ்­வாறே தீர்­வின்றிக் கிடக்­கின்­றன. இன ரீதி­யி­லான ஒடுக்­கு­மு­றை­களால் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் அணு­கப்­ப­டாதுஇ அதனை பூசி மெழு­கிக்­கொண்டே தற்­போதும் அநேக நல்­லி­ணக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இது ஆரோக்­கி­ய­மா­னதா என அச்­சப்­பட வேண்­டி­யுள்­ளது. யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தில் மாண­வர்­க­ளி­டையே காணப்­பட்ட முரண்­பாடு மோத­லாக உருப்­பெற்­ற­மை­யினை சடு­தி­யான நிகழ்வு எனக்­கொள்ள முடி­யாது. அடிப்­ப­டையில் முரண்­பாடு என்­பது ஒப்­பீட்­ட­ளவில் மென்­மை­யான ஓர் விடயம் ஆகும். இரு தரப்­பினர் வெவ்­வேறு பட்ட கொள்­கை­யினைக் கொண்­டி­ருப்­பார்­க­ளாயின் , அதனைக் கூட முரண்­பாடு எனலாம். இந்த முரண்­பாட்டு நிலை­மைகள் உரி­ய­வாறு அணு­கப்­ப­டாமல் போர்த்தி மூடப்­படும் போதுஇ அது ஏதோ­வொரு சந்­தர்ப்­பத்தில் மோத­லாக வெடிக்­கின்­றது. இது யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் நடை­பெற்­றது என மாண­வர்கள் கூறு­கின்­றனர்.

இந்த நிலையில், வடக்கு மாகாண சபை அதா­வது முத­ல­மைச்­சரும் எதிர்க்­கட்சித் தலை­வரும் இணைந்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்இ பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இவ்­வா­றான நிலை­மைக்குச் செல்­வ­தற்கு அடிப்­ப­டை­யாக இருந்த கார­ணி­களை அறி­வ­தற்கு ஓர் ஆக்­க­பூர்­வ­மான விசா­ரணை அவ­சியம் என வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அத்­துடன், இதனை தனியே குற்­ற­வியல் செயற்­பா­டாகக் கரு­த­வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்­துள்­ளனர். அர­சாங்கம் தற்­போது விசா­ரணைக் குழு அமைத்­துள்ள நிலையில்இ இவ் விசா­ர­ணைக்­குழு சம­கால அர­சியல் சூழ்­நி­லை­களைச் சமா­ளிப்­ப­தற்­கா­ன­தான அறிக்­கை­யினை வெளி­யி­டாது தீர்­வு­க­ளுக்­காக பிரச்­சி­னை­யினை வெளிப்­ப­டுத்தி தீர்­வு­களைத் தேட எத்­த­னிக்­க­வேண்டும்.

மோதலும் ஒரு­வகை உறவின் மூலமே ஏற்­ப­டு­கின்­றது. யுத்த காலத்தில் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு சிங்­கள மாண­வர்கள் அனு­ம­திக்­கப்­ப­டாத போது அங்கு மோதல் ஏற்­ப­ட­வில்லை. அது­போன்றே போர்க்­கா­லத்தில் தெற்கில் இருந்து சிங்­கள கடல்­தொ­ழி­லா­ளர்கள் வடக்­குக்கு வருகை தராத வேளைஇ இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள்இ மோதல்கள் ஏற்­ப­ட­வில்லை. இவ்­வாறு தமி­ழர்­களும் சிங்­க­ள­வர்­களும் உற­வாக இணைக்­கப்­படும் போதே பல­த­ரப்­பட்ட பிரச்­சி­னைகள் ஏற்­பட வாய்ப்­புக்கள் உள்­ளன. ஆகவேஇ இந்த நிலையில் சரி­யான நீதி­யான – நியா­ய­மான நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­டாது பூசி மெழு­கப்­பட்ட நல்­லி­ணக்கம் என்ற புள்­ளியில் இரு­த­ரப்­பி­னரும் இணைக்­கப்­ப­டு­வார்­க­ளாயின் இ பல பிரச்­சி­னைகள் தோன்­றலாம்.

சம­கால அர­சியல் தக்­க­வைப்­புக்­க­ளுக்­காக நல்­லி­ணக்கம் ஓர் உயர்ந்த மட்­டத்­தி­லி­ருந்து வடி­வ­மைக்­கப்­பட்டு மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்டால் எதிர்­கா­லத்தில் தமிழ் மக்­களும் சிங்­கள மக்­களும் முஸ்லிம் மக்­களும் கலக்கும் போது அங்கு மோதல்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான அதிக சாத்­தி­யங்­களே உண்டு. தற்­போது ஓரிரு பிரச்­சி­னைகள் தானே காணப்­ப­டு­கின்­றன. அவற்­றினை சட்­டத்­தினைக் கொண்டும் தனி நபர் குழுக்­களின் பிரச்­சினை என்றும் கருதி நட­வ­டிக்கை எடுத்து விட்டு தீர்வு காண்­பது சாத்­தி­ய­மில்லை. மக்­களை மான­சீக ரீதியில் நல்­லி­ணக்கம் நோக்கி கொண்டு செல்­லாது அர­சியல் மட்­டத்தில் மாத்­திரம் இணக்­கத்­தினை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் நினைக்­கு­மானால் அது எதிர்­கா­லத்தில் இன்று பல்­க­லைக்­க­ழகம் போலல்லாது மேலும் பல இடங்களிலும் முரண்பாடுகளையே ஏற்படுத்தும். அது நாட்டினை நல்லிணக்கம் நோக்கியதாக கொண்டு செல்லாது.13668921_845211212278972_8036788159506960593_o

இந்த இடத்தில் அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி வெகுவாக பேசுவதை விடுத்து நல்லிணக்கத்தினை சிந்தனையில் நிறுத்தி தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமமாக வாழக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்க காலம் தாழ்த்தக்கூடாது. அதன் வாயிலாக மக்கள் சமூகங்களிடையே இயல்பாகவே நல்லிணக்கம் நிலைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவின் கடந்த அரசாங்கத்தில் பிரச்சினைகள் பற்றிப் பேசுவது தேசிய பாதுகாப்பிற்கு விரோதமானது என மட்டம் தட்டப்பட்டது. அது போன்று இன்றைய அரசாங்கத்தில் பிரச்சினைகள் பற்றிப் பேசுவது நல்லிணக்கத்திற்குப் பாதகமானது என்று மட்டம் தட்டும் நிலைமையினையும் சில இடங்களில் அவதானிக்கமுடிகின்றது. இந்த நிலையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும்.

அரசாங்கம் உண்மையில் தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் பிரச்சினைகள் எதுவும் இல்லை. இதில் தீய சக்திகளின் தலையீடுகளே காணப்படுகின்றன என பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. இவ்வாறான பேச்சுக்களும் ஆரோக்கியமானவை இல்லை. காணப்படும் பிரச்சினைகளை சமகால அரசியல் சலனத்தினை தணிப்பதற்காக வெறுமனே நிராகரித்து போர்த்தி மூடுவது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கானதாக அமையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com