சற்று முன்
Home / செய்திகள் / இன்று வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் ..

இன்று வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் ..

வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் நிகழ்வு இன்று (07) வவுனியா புகையிரதநிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 16-09-2019 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வின் ஏற்பாடுகள் குறித்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மகளிர் சங்கங்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com