முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் சண்டை – களோபரமானது சபை


வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், வடமாகாண சபையின் எதிர்க் கட்சித்தலைவர் தவராசாவுக்கும் இடையில் வடமாகாண சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் முதலமைச்சரை நோக்கி கை நீட்டியவாறு பேசினார். வடமாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று காலை சபா மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 101ஆம் ஆமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு இன்றைய அமர்வில் முதலமைச்சர் பதிலளித்துள்ளார். அங்கு உரையாற்றிய முதலமைச்சர்,
“கட்சியில் வேண்டப்படாத ஒருவராக மாறியிருக்கும் எதிர்கட்சி தலைவர் த லைவர் சி.தவராசா அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் சாதுரியத்தினால் எதிர்கட்சி தலைவர் பதவியினை தக்கவைத்துள்ளார். தன்னை கட்சியை விட்டு தூக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் செயற்படும் அவர் ஊடகங்களில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காக எங்களை கையாளாகதவர்களாக காட்ட நினைக்கிறார். நாம் பல விடயங்களை செய்திருக்கிறோம். ஆனால் அவை தமக்கு ஏற்றால்போல் இல்லை என்பதால் அதனை விமர்சிக்கிறார். எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கட்சியில் வேண்டப்படாத ஆளாக மாறியுள்ளதால் அடுத்த தேர்தலில் தனக்கு ஆசனம் பெறுவதற்காக ஊடகங்களில் விளம்பரம் தேடுகிறார். பாப்பரசரைப் போன்று பத்திரிகைகளில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றார். என்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்.” என தனது உரையில் தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்த கருத்துக்களால் கோபமடைந்த வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, முதலமைச்சரின் கருத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டதோடு முதலமைச்சரை நோக்கி கைநீட்டிக் கதைத்துள்ளார். இதனால் சபை களோபரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com