இன்று வடக்குமாகாணம் உட்பட பல பிரதேசங்களில் பலத்த மழை!

இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று(13) பிற்பகல் இரண்டு மணிக்குப் பிறகு இடியுடன்கூடிய மழை அல்லது புயல்காற்று வீசும் சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது இடையிடையே கடும் காற்று மற்றும் மின்னல் தாக்குதல் இடம்பெறக்கூடும் என்பதனால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com