இன்று யாழ்.,வவு­னியாவில் கவ­ன­யீர்ப்பு போராட்­டங்கள்!

அநு­ராத­புரம் மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்ட தமது வழக்கை மீளவும் வவு­னியா மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­று­மாறு வலி­யு­றுத்தி அநு­ராத­புரம் சிறைச்­சா­லையில் செங்கன் எனப்­படும் இரா­ஜ­துரை திரு­வருள் மதி­ய­ழகன் சுலக்ஷன் கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அர­சியல் கைதிகள் முன்­னெ­டுத்து வரும் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்தும் நாடா­ள­விய ரீதியில் உள்ள சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்க கோரியும் யாழ்ப்­பா­ணத்­திலும் வவு­னி­யா­விலும் பாரிய கவ­ன­யீர்ப்பு போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்த போராட்­டங்­களை பொது மற்றும் சிவில் அமைப்­புக்கள் கூட்­டாக இணைந்து முன்­னெ­டுக்­க­வுள்­ளன. அதன் பிர­காரம் யாழ்ப்­பா­ணத்தில் காலை 9மணி முதல் 12 மணி­வ­ரையில் யாழ் மத்­திய பேருந்து நிலை­யத்­திற்கு முன்னால் நடை­பெ­ற­வுள்­ள­தோடு வவு­னி­யாவில் முற்­பகல் 10 மணிக்கு வவு­னியா மத்­திய பஸ் நிலையம் முன்­பாக நடை­பெ­ற­வுள்­ளது.

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்யும் தேசிய அமைப்பின் அமைப்­பாளர் அருட்­தந்தை சக்­திவேல் தலை­மையில் அண்­மையில் நடை­பெற்ற கூட்­டத்தின் போது யாழில் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்­தினை நடத்­து­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்தக் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்­திற்கு சிவில் அமைப்­புக்கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், பொது­மக்கள் என அனை­வ­ரையும் கலந்து கொண்டு அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­து­மாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

சமூக விஞ்­ஞான ஆய்வு மையம், தமிழ் மக்கள் வாழ்­வு­ரி­மைக்­கான செயற்­பாட்டு மையம், அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பு. தமிழ் மக்கள் பேரவை, கிரா­மிய உழைப்­பாளர் சங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி, ஜன­நா­யக மக்கள் விடு­தலை முன்­னணி, ஐக்­கிய சோஷ­லிச கட்சி, சமூக நீதிக்­கான வெகு­ஜன அமைப்பு, புதிய ஜன­நா­யக மாக்­கிச லெனின் கட்சி, வலி­காமம் வடக்கு மீள்­டி­யேற்ற மற்றும் புனர்­வாழ்வு குழு, யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊழியர் சங்கம், ஆசி­ரியர் சங்கம், மாணவர் ஒன்­றியம் ஆகி­ய­னவும் ஆத­ரவை வழங்­க­வுள்­ளன.

அதே­போன்று வவு­னியா மாவட்ட பொது அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் ஆகி­யோ­ருக்கு இடையில் நடை­பெற்ற சந்­திப்பில் சிறைச்­சா­லை­களில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து அர­சியல் கைதி­க­ளையும் எந்­த­வித நிபந்­த­னை­யு­மின்றி உட­ன­டி­யாக விடு­விக்க அழுத்­த­மாக வலி­யு­றுத்த வேண்டும் என எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தின் பிர­காரம் நடைபெறவுள்ள போராட்டத்தில் வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம், சமூக அமைப்புக்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், மகளிர் அமைப்புக்கள், கிராம அமைப்புக்கள் என 20 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com