இன்று புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகம் முற்றுகை!

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு , அந்தப் பகுதி மக்கள் இன்று(16) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரா­ணு­வத்­தி­ன­ரின் வாக்­கு­று­தி­கள் பொய்­யான நிலை­யில் கால­வ­ரை­யற்ற கவ­ன­வீர்ப்புப் போராட்­டத்தை அவர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தி­யில் படை­யி­னர் நிலை­கொண்­டுள்ள தமது சொந்த நிலங்­களை விடு­விக்­கு­மாறு கோரி கடந்த ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி மக்­கள் ஜன­நா­யக ரீதி­யில் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

15 நாள்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்­தப் போராட்­டத்தைத் தொடர்ந்து பொது­மக்­க­ளுக்கு முல்­லைத்­தீவு இரா­ணுவ அதி­காரி கால­ அ­வ­கா­சம் வழங்­கி­யி­ருந்­தார்.

3 மாதங்க­ளின் பின்­னர் காணி­களை ஒப்­ப­டைப்­ப­தாக அவர் வாக்­குறுதி வழங்­கி­னார். அந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­டும் என நம்­பிக்கை கொண்ட பொது­மக்­கள் தம­து­ போ­ராட்­டத்தைத் தற்­கா­லி­க­மாகக் கைவிட்­டி­ருந்­த­னர்.

எனி­னும் இரா­ணு­வத்தி­ன­ரால் கொடுக்­கப்­பட்ட கால அவ­காச வாக்­கு­றுதி­கள் காலா­வ­தி­யா­கின. இந்த நிலை­யி­லேயே மீண்­டும் போரா­ட்டத்தை ஆரம்பித்துள்ளதாகக் காணி­உ­ரி­மை­யா­ளர்­கள் அறி­வித்­துள்­ள­னர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com