இனிமேல் சரி­யான தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றவே விரும்புகின்றேன்! – கோத்தபாய

சரி­யான தலை­மைத்­து­வத்தின் கீழ் சேவை­யாற்­றவே நான் விரும்­பு­கின்றேன். மாறாக அர­சி­யலில் கால் பதிக்க நான் தயா­ரில்லை என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்பாய ராஜபக் ஷ தெரி­வித்தார்.

காணாமல் ஆக்­க­ப்பட்டோர் தொடர்­பி­லான சட்­ட­மூலம்

இரா­ணு­வத்தை தண்­டிக்கும் வகை­யி­லேயே அமையும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இத­னைக்­கு­றிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறி­கையில்,

காணாமல் ஆக்­கப்­ப­டுவோர் தொடர்பில் கொண்டு­வ­ர­வி­ருந்த சட்­ட­மூலம் தற்­கா­லி­க­மாக

தடுக்­கப்­பட்­டுள்ள போதிலும் இதனை நிரந்­த­ர­மாக தடுக்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு இல்­லா­விடின் இந்த சட்­ட­மூ­லத்தில் உள்ள விட­யங்கள் அனைத்தும்

யுத்­தத்தை நிறை­வுக்கு கொண்­டு­வர தியாகம் செய்த அனைத்து இரா­ணுவ வீரர்­க­ளுக்கும் மிகப்­

பெ­ரிய அச்­சு­றுத்­த­லாக அமையும். இரா­ணுவ வீரர்­களை தண்­டிக்க அனை­வரும் துணை­போ­ன­தாக அமைந்­து­விடும்.

இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரண்டு ஆண்­டு­கள் கடந்­துள்ள போதிலும் இன்னும் எம்மை ஊழல் குற்­ற­வா­ளிகள் என்ற பெயரில் விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றதே தவிர இது­

வ­ரையில் அவர்கள் முன்­வைத்த எந்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் உண்­மை­களை நிரூ­பிக்க முடி­ய­வில்லை.

ஆகவே, இவர்கள் பொய்­களை கூறி மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர் என்­பது தெளி­வா­கின்­றது. ஆகவே, இவர்கள் எம்மை பழி­வாங்­கவே இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு

வரு­கின்­றனர் என்­பது தெளி­வாக தெரி­கின்­றது. எம்­முடன் இணைந்து செயற்­பட்ட நபர்­களே இன்று எமக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­றனர். ஆகவே, அவர்கள் எமக்கு எதி­ராக குற்­றச்­சாட்டு

முன்­வைக்க முன்னர் மனச்­சாட்­சியை கேட்க வேண்டும்.

இப்­போது மக்கள் நிய­மித்­துள்ள அர­சாங்கம் மிகவும் பொருத்­த­மில்­லாத ஒரு அர­சாங்­க­மாகும்.

மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை கவ­னத்தில் கொள்­ளாது தமது தேவைக்­கான ஆட்­சியை இவர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எனவே, பொருத்­த­மான தலை­மைத்­து­வத்தை மீண்டும் உருவாக்க மக்கள் முன்வரவேண்டும். எனினும் அரசியல் பயணத்தை மேற்கொள்ள நான் விரும்பவில்லை. சரியான அரசியல் தலைமையின் கீழ் சேவையாற்றவே நான் விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com