சற்று முன்
Home / செய்திகள் / இனவாதத்தை ஸ்ரீலங்கா அரசு கைவிடாது – கண்டி கலவரத்தில் முஸ்லீம் மக்களுக்கு நீதி கிடைக்காமைகும் அந்த இனவாததே காரணம்

இனவாதத்தை ஸ்ரீலங்கா அரசு கைவிடாது – கண்டி கலவரத்தில் முஸ்லீம் மக்களுக்கு நீதி கிடைக்காமைகும் அந்த இனவாததே காரணம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அவையில்  இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 9ல் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 19-03-2019 ஆற்றிய உரை இங்கு வருமாறு.

இனவாதத்தைக்களையும் அரசியல் விருப்பு ஸ்ரீலங்கா அரசிடம் இல்லை. கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீதி கிடைக்காமைகும் அந்த இனவாததே காரணம். ஐ.நாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இனங்களுக்கிடையேயான முரண்பாட்டை களைந்து இன சமத்துவத்தை பேணுவதில் முக்கிய தடைக்கற்களாக அரசுகளின் அரசியல் விருப்பின்மையும், இனவாத மனப்பான்மையின்  நிலவுகையும், எதிர்மறையான முன்முடிவுகளுமே விளங்குவதாக டர்பன் பிரகடனம் வெளிப்படுத்துகிறது.

    கடந்தவருடம் சிறீலங்காவின் மத்தியமாகாணத்தில் முஸ்லிம்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட இனவாத வன்முறைகளை தொடர்ந்து அதனை விசாரிப்பதற்காக  சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு 2018  மே 9-12 வரையான காலப்பகுதியில் ஒரு விசாரணையை நடத்தியிருந்தது. அவ்வன்முறைகளால்  பாதிக்க்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்தவர்கள் அந்த ஆணைக்குழுவில் ஆஜராகி தம் கண்களால் கண்டவற்றை சாட்சியமாக் வழங்கியிருந்தனர்.

    அந்தவிசாரணையின் முடிவில் குறித்த விசாரனை அறிக்கையானது 2018 யூலை மாதம் வெளியிடப்படும் என அந்தவிசாரணைக்குழுவின் ஆணையாளார்கள் தெரிவித்திருந்தனர்.

    ஆனால் அந்த விசாரணை நடைபெற்று பத்து மாதங்கள் ஆனபோதும் அந்த விசாரணை அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை என்பதோடு இந்த காலதாமதத்திற்கான காரணமும் இன்னமும் சிறிலங்க மானித உரிமைகள் ஆணைக்குழுவினரால் வெளிப்படுத்தப்படவில்லை.

    அதனால்  அந்த வன்முறைகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அப்பால் ஏறத்தாழ 450 இற்கும் அதிகமான  சொத்துடமைகள் சேதப்படுத்தப்படாதாக சிறில்னக்காவின் பிரதமரே வெளிப்படையாக ஒப்புக்கொன்ட நிலையிலும், அவ்வன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான எந்தவொரு இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை.

    இவ்வன்முறைகள் தொடர்பில் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு மேலதிகமாக‌ குற்றவியல் தடுப்புப்பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஆகியனவும் தனித‌னியான விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

    விசேட அதிரடிப்படையினரலால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு, ஆயுதங்களை வைத்திருந்ததாக ஒப்புக்கொள்ளுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும்,  இந்த வன்முறைகளின் போது காயப்பட்ட முஸ்லிம்களுக்கு  சிகிச்சையளிக்க சில சிங்கள வைத்தியர்கள் மறுத்ததாகவும் குற்றம் சாட்டப்படுள்ள நிலையில்,  பதிவு செய்யப்பட்டுள்ள அந்த குற்றச்சாட்டுகள்  தொடர்பில எந்தவொரு  விசாரணைகளும் இதுவரை முன்னெடுக்க்ப்படவில்லை.

ஆக இந்த இனவன்முறைகள் நிக்ழத்தப்ட்டு ஒருவருடமாகியும் அதற்கான நீதி இதுவரை வழங்கப்படவில்லை.

    இந்த வனுமுறையை தூண்டியதாக குற்றம்சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான எந்தவொரு இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை.

    கனம் உபதலைவர் அவர்களே, இதுவே  சிறிலங்காவின் இனவாதம் என்பதை தங்களுக்கு வெளிப்படுத்துகின்றேன்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com