சற்று முன்
Home / பதிவுகள் / இனவழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

இனவழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

இன அழிப்பிற்கு எதிரான சர்வதேச குற்றவியல் பொறிமுறையை வலியுறுத்தி யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து வேட்டை இன்று (04.09.2015) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு இதற்கான அழைப்பினை விடுத்திருந்தது. 

இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை அரசினால் உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளக விசாரணை பொறிமுறையினையும், விசாரணையையும், உறுதிபட நிராகரிக்கின்றோம் என்ற கோரிக்கையினை முன்வைத்து யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ,வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் மதத்தலைவர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், ஊழியர் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்கினர்.
நாளையும் மத்திய பேருந்து நிலையம்,நல்லூர் ஆலய சூழல்,திருநெல்வேலி பொதுசந்தை,பருத்தித்துறை பொதுசந்தையென பல இடங்களிலும் கையெழுத்து வேட்டை தொடரவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com