சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / இனப்படுகொலை நடக்கும் போது ,கூட்டமைப்பினர் எங்கே சென்றார்கள் ?

இனப்படுகொலை நடக்கும் போது ,கூட்டமைப்பினர் எங்கே சென்றார்கள் ?

தமிழ் மக்களின்  தேசிய  தலைவர் தாம்  என கூறுபவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் போது எங்கே போனார்கள் என விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றையதினம் பருத்தித்துறையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை தேர்தலில் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் என 33 தரப்பு தேர்தலில் களமிறங்குகின்றன இறுதி யுத்தம் நடைபெற்ற போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும்  இன்று பிரிந்து சென்று புதிய கட்சிகளை  உருவாக்கி இன்று களத்தில் இறங்கியிருக்கிறார்கள்

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் அன்று தமது பதவியினை ராஜினாமா செய்திருந்தால்அரசாங்கத்திற்கு ஒரு பேரிடியாக இருந்திருக்கும் அதேபோல் மக்கள் கொல்லப்பட்டிருக்க இருக்கமாட்டார்கள்

நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன் இவர்களெல்லாம் தமிழ் மக்களின் நலனிற்காக  தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் ஏன் இவ்வாறு கட்சிகளாக பிரிந்து வாக்குகளை சிதறடிப்பற்கு செயற்படுகின்றார்கள்

அத்தோடு  சிலர்  தம்மைதேசியத் தலைவர் என்று கூறித் திரிகிறார்கள் இவர்களெல்லாம்.

 வன்னியில் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்றபோது எங்கே இருந்தார்கள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் தங்கியிருந்தார்கள் அவ்வாறு தமது சுயலாப அரசியல் செய்வதற்காகவே இங்கே வாக்கு கேட்டு  வருகின்றார்கள்.
 எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்த வரைக்கும் இரண்டு முறை எமது தலைவர் பிரதமராக இருந்த போதும் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு தொடர்பில் கரிசனை செலுத்தி பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டார் இனிவரும் காலத்திலும் தமிழ் மக்களுக்குரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலே நமக்கு உரிய தீர்வு கிடைக்குமே தவிர தமிழ் தேசிய தலைவர்கள் என்று கூறுபவர்களால் தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கப் போவதில்லை என  தெரிவித்தார்

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com